திறம்மிகு துணிவு
அகத்தொளியே துணிவு
அகத்துணர்வே துணிவு
ஊக்கவுணர்வே துணிவு
பாய்வது மட்டுமன்று துணிவு
பதுங்கிப் பாய்வதும் துணிவே
அயராத விழிப்புணர்வே துணிவு
அருளும் பொருளும் அளிக்கவல்லது துணிவே
“உள்ளம் உடைமை உடைமை” என குறள் குறிப்பிடுவது துணிவையே