திருநிறை தெள்ளிய உள்ளம்
திரு என்ற தமிழ்ச்சொல்லுக்கு ‘செல்வம்’, ‘ஊக்கம்’, ‘அழகு’, ‘ஒளி’, ‘முழுமை’, ‘நிறைவு’, எனப் பலபொருள் உண்டு.
மேற்கூறிய அனைத்து பண்புகளும் கொண்ட உள்ளமே திருநிறை உள்ளம். அதுவே தெள்ளிய உள்ளம். வளமையும் பொதுமையும் நிறைந்ததே திருநிறை உள்ளம். உழைப்பை போற்றுவதே திருநிறை உள்ளம். பொதுநலம் போற்றுவதே அவ்வுள்ளம்.இறைமை என்பது இந்த நல்ல உள்ளமே.
நொடிக்கு நொடி ஊக்கவுணர்வுடன் இருப்பவரே திருநிறை உள்ளத்துடன் இருப்பர்.
நலமே விளைக…….